3 போலீஸ் அதிகாரிகள் கொலை…..பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா

டில்லி:

3 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான புதிய அரசு கடந்த மாதம் பதவியேற்றது. ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு இம்ரான்கான் விருப்பம் தெரிவித்து வந்தார். இதையடுத்து இரு நாட்டு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். இம்ரான் கோரிக்கையை இந்தியா ஏற்றது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 3 போலீஸ் அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரம் கடந்த நிலையில் நிலையில் இந்தியா ரத்து செய்துள்ளது. “இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒருமாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது,” என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.