ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு பேய் மழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் 733 மில்லி மீட்டர் மழை பெய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 350 ஆண்டுகளில் தற்போதுதான் இந்த பேய் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் மற்போது வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் விடாத அடை மழை காரணமாக மக்கள் நரகத்தில் வாழ்வதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் பெய்து வரும் பேய் மழை காரணமாக புதிய வரலாறு படைத்து உள்ளது. 350 ஆண்டுகளுக்கு பிறகு   24 மணி நேரத்தில் 733 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

350 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அபூர்வ நிகழ்வு,  ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்னும் இடத்தில 773 mm மழை பெய்ததுள்ளது.

தமிழகத்தில், கடந்த 2015-ம் ஆண்டு தாம்பரம் பகுதியில்,  24 மணி நேரத்தில் 494 மிமீ மழை பெய்து, தமிழகத்தை, குறிப்பாக சென்னையை தண்ணீர் காடாக மாற்றி வரலாற்று பேரழிவை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில்,  பாலைவன பிரதேசமான ராஜஸ்தானிலும் மற்றும் வட குஜராத்திலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது

இதன் காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

வருடத்தின் மொத்த மழை அளவில் 50% மழையை ராஜஸ்தான் ஒரே நாளில பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. . வட குஜராத்தில் உள்ள. தனித்வாடா 342 மிமீ மழையும், பாலன்பூர் 255 மிமீ மழையும் டீசா 248 மிமீ மழையும் பெய்துள்ளது.

மவுண்ட் அபு பகுதியில் 1992-ம் வருடம் செப்டம்பர் மாதம் 8 -ம் தேதி பெற்ற மழையே இதுவரை பெய்த மழை அளவில் மிகப் பெரிய சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனை உடைக்க பட்டு விட்டது.

குஜராத்தில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 2200 மக்களை ராணுவத்தினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு,பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாநிலம், மக்கள் பாதுகாப்பாகவும்,  உஷாராக இருக்கும்படியும் குஜராத் அரசு அறிவித்து உள்ளது.