ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையிலிருந்து எழுந்தருளியுள்ளார் அத்தி வரதன்…!

அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது இருமுறை தான் அத்தி வரதரை தரிசிக்க முடியும். கடந்த, 1854, 1892, 1937, 1979 ஆகிய ஆண்டுகளில், அத்தி வரதர் தரிசன உற்சவம் நடந்தது.

இந்த நுாற்றாண்டில், இந்தாண்டில் முதன் முறையாக, ஜூலை, 1ம் தேதி, அனந்த தீர்த்தத்தில் இருந்து வெளியே வருகிறார். அத்தி வரதரை, வசந்த மண்டபத்தில், 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர்.

முதலில், சயனக் கோலத்திலும், பின், நின்ற கோலத்திலும் தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனித்தபடி, அருள்பாலிப்பார்..

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார். தற்போது வசந்த மண்டபம் பகுதியில் அத்திவரதர் இருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையில் இருந்து அத்தி வரதன் எழுந்தருளியுள்ளார் .16 நாக சிலைகள் அத்தி வரதருடன் இருந்தன . 40 ஆண்டுகளாக அத்திவரதன் திருமேனியில் இருந்த பச்சையம் அனைவருக்கும் தரப்பட்டது. வரதன் திருமேனியில் இருந்த காரணத்தால் துர்நாற்றம் எதும் இன்றி மிகுந்த வாசனையுடன் இருந்தது.

அத்தி வரதனின் பொது தரிசனம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் துவக்கப்படவுள்ளது .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 40 yrs, Athi Varathar, Kanchipuram
-=-