பாரிஸ்

பிரெஞ்சு ஒபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்றைய இறுதிப்போட்டிய்ல் அஸ்திரேலியா வென்றது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடை பெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று நடந்தது. இதில் செக் குடியரசை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மார்கெடா வான்ரவோவா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஸ்லே பார்டி ஆகியோர்  மோதினர்.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஸ்லே பார்டியின் கை ஓங்கி இருந்தது. முதல் செட்டை அவர் 6-1 என வென்றார். அதை ஒட்டி அவருடைய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இரண்டாவது செட்டிலும் தீவிரமாக ஆடிய அஸ்லே பார்டி 6-3 என்னும் செட் கணக்கில் வென்றார்.

இதன் மூலம் செக் குடியரசு நாட்டின் வீராங்கனை மார்கெடா வான்ரவவோவா ஆஸ்திரேலியா நாட்டின் ஆஸ்லே பார்டி யால் 6-1, 6-3 என்னும் செட் கணக்கில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்லே பார்டி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்த 46 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி மீண்டும் இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 1973 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மார்கிரெட கோர்ட் சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது ஆஸ்லே பார்டி  சாம்பியன் ஆகி உள்ளார்.