டில்லி : கொரோனா பாதிப்பு 53 நாட்களுக்குப் பிறகு 1000க்கு கீழ் குறைந்தது.

டில்லி

டில்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

மூன்றாம் இடத்தில் உள்ள டில்லியில் கடந்த 53 நாட்களாகத் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இன்று முதல் முறையாக இந்த எண்ணிக்கை 954 ஆக உள்ளது.

இதுவரை டில்லியில் 1,23747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3663 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மொத்தம் 1,04,918 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 15,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.