6 வருடங்களுக்கு பிறகு profit-sharing முறையில் தமிழ் படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்….!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கடைசியாக இயக்கிய படம் லிங்கா. ஆறு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் இயக்குனராக திரும்புகிறார்.

சத்யராஜ் நடிப்பில் ஒரு படத்தினை அவர் இயக்குகிறார் என அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தான் இந்த படத்தினை தயாரிக்கிறார். சத்யராஜ் மட்டுமின்றி இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஆர். பார்த்திபன் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

சுமார் இரண்டு கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை 30 நாட்கள் ஷூட்டிங் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னையில் தான் முழு படமும் எடுக்கப்பட உள்ளது. ஷூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக profit-sharing அடிப்படையில் உருவாகிறது. அதாவது சம்பளத்திற்க்கு பதில் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு படம் வெளியான பிறகு வரும் லாபத்தில் பங்கு அளிக்கப்படும். இது படம் தியேட்டர்களில் வரும் வருமானத்தை பொறுத்து இருக்கும்.