ஏழு வருடங்களுக்குப் பின் காஷ்மீர் பற்றி வாய் திறந்த கோமேனி

--

ஈரான்

ஈரானின் தலைவர் ஆயதுல்லா கோமேனி, காஷ்மீர்,  பெஹ்ரைன், மற்றும் ஏமன் நாடுகளுக்கு இஸ்லாமிய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஏழு வருடங்களுக்கு முன்பு ஆயதுல்லா கோமேனி காஷ்மீர் பற்றி பேசியதற்கு இந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் காஷ்மீர் பற்றிய எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமிய மக்கள், காஷ்மீர், பெஹ்ரைன் மற்றும் ஏமன் நாடுகளுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்து, அதன் எதிரிகளுக்கு எதிர்ப்பைக் காட்டவேண்டும் என பதிந்துள்ளார்.  இது அவரது அதிகாரபூர்வ இணைய தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி இந்தியாவிலும், உலக அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுAf