8 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் பாமக போட்டி: அன்புமணி தகவல்

கோவை:

மிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு களுக்கு பிறகு இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்த்து வந்த பாமக வர உள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்து உள்ளது.

கோவை  சிங்காநல்லூரில்  2 நாட்கள் பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது  தேர்தல் கூட்டணி தொடர்பாக  பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றவர் ,20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில்  போட்டியிடுவோம் என்றார்.

மேலும் பேசியதாவது,  2018-ம் ஆண்டு முடிந்து 2019-ம் ஆண்டு தொடங்க போகிறது. கட்சியில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். தமிழ் நாட்டில் நீர் நிலைகளை பாதுகாக்க பா.ம.க. தீவிர கவனம் செலுத்தி வருகிறது.  கடந்த ஆண்டில் பா.ம.க. மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது என்றார்.

பா.ம.க. தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. பொதுமக்கள், விவசாயிகள் என்று அனைத்து தரப்பு மக்களுக்காகவும் இந்த கட்சி வெறும் போராட்டங்களை மட்டும் நடத்தாமல் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்ற பாடுபட்டு வருகிறது. அதற்கான திட்டங்களை தயாரித்து கொடுக்கிறோம்.

வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாகும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து மட்டுமே பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல் குறித்து பலர் மறந்து போய் விட்டனர். இந்த 20 சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. எனவெ இந்த தேர்தல் முக்கிய தேர்தல்.

நமது கட்சி  கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின்னர் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஆனால் இப்போது 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்றார். மேலும், பெரம்பூர், பூந்தமல்லி, செங்கல்பட்டு, சோளிங்கர், குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்போரூர், அரூர், நிலக்கோட்டை, ஆம்பூர், தஞ்சாவூர் போன்ற 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை தீர்மானிப்பது பாமகத்தான் என்றார்.

தேர்தல் சமயத்தில் நாம்  யாருடன் கூட்டணி அமைப்போம் என்பதை விட நம்முடன்  யார் சேருவார்கள் என்பது தான் முக்கியம். பாமக கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து விட்டனர். மக்களின் நம்பிக்கையை ஓட்டாக மாற்றி காண்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 20 தொகுதி இடைத்தேர்தல், 8 ஆண்டுகள், anbumani, Anbumani Ramadoss, byelection, pmk, pmk anbumani, அன்புமணி ராமதாஸ், இடைத்தேர்தல்:, பாமக செயற்குழு, பாமக பொதுக்குழு, பாமக போட்டி
-=-