சென்னை:

நாளை முதல் பாம்பன் பாலம் மீண்டும் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 84 நாட்களாக ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டிருந்த நிலையில், நாளை முதல் ரயில் போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும் என ரயில்வே அறிவித்து உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் – ராமேசுவரம் இடையே உள்ள  2.2 கிலோ மீட்டர் தொலைவில் பாம்பன் கடல் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரயில் பாலம் அமைக்கப்பட்டு கடந்த 1914 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த பாலம் சுமார் 100 ஆண்டுகளை  கடந்து விட்ட நிலையில் கடந்த ஆண்டு (2018)  டிசம்பர் 4ம் தேதி   பாலத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக, அந்த வழியாக செல்லும் அனைத்து   ரயில் போக்கு வரத்துக்களும் நிறுத்தப்பட்டு, மண்டபத்துடன் ரயில் சேவை  நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து புதிய பாலத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், ஏற்கனவே உள்ள பாம்பன் பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று  வந்தது. தற்போது பணிகள் முடி வடைந்து, சோதனை ஓட்டம் நடத்தி பரிசோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து ரயிலை இயக்கலாம்  இந்திய ரயில்வே தலைமை பொறியாளர் சான்றிதழ் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து சுமார்  84 நாட்களுக்கு பின் நாளை (27ம் தேதி) முதல் வழக்கம் போல ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.