Random image

தமிழக அரசின் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப கொள்கை வெளியீடு

சென்னை:

தமிழக அரசு மறுசீரமைப்பு செய்யப்பட்ட புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப கொள்கையை வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ), புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கொள்கை 2018ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்ப கொள்கையை மறுசீரமைப்பு செய்து தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்கையை கள அளவிலும், குறிப்பிட்ட கால அவகாசத்தில் அமல்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு எல்காட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,‘‘இந்த புதிய கொள்கைகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், எம்எஸ்எம்இ, புதிய தொழில் முனைவோருக்கு உதவியாக இருக்கும். அதனால் தொழிலதிபர்கள் புதிய முதலீடுகளை கொண்டு வரவேண்டும்’’ என்றார்.