மீண்டும் இயக்குநராகும் ராமராஜன்….!

--

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன்.1985-ம் ஆண்டு ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கிராமிய பாதையிலேயே சென்று மக்களை கவர்ந்தவர் . பல தரமான படங்களை தந்து நடிப்பிலும் வசூலிலும் தோல்வியடையாமல் கடந்து வந்தார் .

இறுதியாக 2012-ம் ஆண்டு ‘மேதை’ படத்தில் நாயகனாக நடித்தார். அதுவே, அவர் நடிப்பில் வெளியான கடைசிப் படமாகும்.

அதற்குப் பிறகு திரையுலகில் சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தார்.

தற்போது மீண்டும் திரையுலகில் இயக்குநராகவுள்ளார். கதையை முழுமையாக எழுதி வைத்திருப்பதாகவும், அந்தக் கதைக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் விரைவில் அவரை அணுகவுள்ளார் ராமராஜன்.