இமாச்சல்: 50 ஆண்டுக்கு முன் விபத்தில் சிக்கிய போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு…ஒருவரது உடலும் மீட்பு

--

சிம்லா:

இந்திய போர் விமானம் ஒன்று 7.-2.-1968ம் தேதி பஞ்சாப் சண்டிகர் நகரில் இருந்து காஷ்மீர் லே பனிமலை பகுதியை நோக்கி 102 வீரர்களுடன் புறப்பட்டு சென்றது.

பருவநிலை மோசமாக இருந்ததால் விமானத்தை சண்டிருக்கு திருப்பி கொண்டு வர விமானி முயற்சித்தார். எனினும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம் மாயமானது. இமாச்சல் லாஹவுல் பள்ளத்தாக்கு பகுதியில் 2003-ம் ஆண்டு அந்த விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் இமாச்சல் தாக்கா பனி முகட்டில் தூய்மை பணியில் சில மலையேற்றக் குழுவினர் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒருவரது உடல் உறைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் விபத்துக்குள்ளான போர் விமானத்தில் பயணம் செய்தவர் என்பது தெரியவந்தது. 1.-7.-2018ம் தேதி இந்த உடல் கண்டெடுக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் விமான பாகங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.