10% வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இந்தியா பெரிய சக்தியாக விளங்கும்!! ரகுராம் ராஜன்

--

டில்லி:

பொருளாதாரம் 10 சதவீத வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இந்தியா பெரிய சக்தியாக மார்தட்டிக் கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் டில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

 

அப்போது அவர் கூறுகையில், ‘‘ கலாசாரம், வரலாற்றுத் தொன்மை ஆகியவை குறித்து பிற உலக நாடுகளுக்கு இந்தியா உபதேசம் செய்யலாம். ஆனால், பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியா யாருக்கும் பாடம் நடத்த முடியாது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு 8 முதல் 10 சதவீத பொருள £தார வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இந்தியா தன்னை வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக மார் தட்டிக் கொள்ள முடியும்.

பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றால் தனியார் துறையினரின் முதலீடு அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 1990ம் ஆண்டு முதல் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 8 சதவீதமாக தான் உள்ளது’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இன்னும் கூடுதலாக அதிகரித்திருக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்க முடியும். பிற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் நமது பொருளாத £ரம் தற்போது வரை சிறியதாகவே உள்ளது. சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட 5 மடங்கு பெரியதாக உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தையும், இந்தியப் பொருளாதாரத்தையும் சமமாக ஒப்பிட முடியாது.

அப்படி ஒப்பிட்டால் சீனா பொருளாதார ரீதியாக பின்தங்க வேண்டும். அதே நேரத்தில் இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளுக்கு மிக வேகமாக இருக்க வேண்டும். நமது பொருளாதாரம் குறித்து அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொள்ளக் கூடாது. சிறிது முன்னெச்சரிக்கையுடன் இரு க்க வேண்டும்’’ என்றார்.

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனுக்கு பணமதிப்பிழப்பில் உடன்பாடு இல்லாத க £ரணத்தால் பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறி விலகியதாக அப்போது செய்திகள் வெளியானது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாகக் குறைந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் இது 6.1 சதவீதமாக இருந்தது. இந்த இரு காலாண்டிலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. நாட்டின்ம் பொருளாதாரம்பின்தங்கியதற்கு பணமதிப்பிழப்பு அறிவிப்பு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.