Random image

ஆப்பிளை தொடர்ந்து அமேசான் மதிப்பும் 1 டிரில்லியன் டாலராக உயர்வு

வாஷிங்டன்:

ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து அசோன் நிறுவன மதிப்பும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.

 

இ -காமர்ஸ் சந்தையில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனமான அமேசான் சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சியை அடைந்து வருகிறது. அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று பங்குச்சந்தை திறந்ததும் அமேசான் மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அப்போது 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அமேசான் எட்டியது. 10 மாதங்களில் அந்த நிறுவனத்தின் மதிப்பு 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 2-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் இந்த சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.