பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் மறுசீரமைப்பு

புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு மீண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் தொடர்பு துறை உட்பட கட்சியின் பல்வேறு பிரிவுகளில் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தவிருகின்றனர் என்று கட்சியை பற்றி நன்கு அறிந்தவர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

பல இடைஞ்சல்களுக்கு பிறகு கடந்த வாரம் கட்சியின் மறுசீரமைப்பு நடந்து முடிந்தது, பல புதிய முகங்களை அறிமுகபடுத்திய சோனியா காந்தி, அவர்கள் முன்பு உரையாற்றி, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்காகவும் உழைக்க வேண்டும், அவர்களுக்காக அரசை எதிர்த்து நிற்கக் கூட தயங்க கூடாது என்று உரையாற்றியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும், பிஹார் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மறுசீரமைப்பு நடைபெறும் என்று கட்சியை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளது புரியாத புதிராகவே இருக்கின்றது.