ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி ஒளிபரப்புக்கு தடை: இலங்கை அரசு அதிரடி

கொழும்பு:

லங்கையில் ஐஎஸ் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அங்கு ஒளிபரப்பாகி வந்த ஜாகிர் நாயக்கின் கேபிள் டிவிக்கு இலங்கை அரசு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில்கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் உள்பட முக்கிய இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ரூ.500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து இலங்கை அரசு  பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இஸ்லாமியர்கள் முகத்தை மூடும் புர்கா அணியக்கூடாது என்று உத்தரவிட்டுஉளளது. அங்குள்ள மதரசாக்களில் தங்கியுள்ள 800 வெளிநாட்டினர் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதையடுத்து,   இஸ்லாமிய பிரசாரகர் ஜாகீர் நாயக்கின்  பீஸ் டிவி ஒளிபரப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது மலேசியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக்,  நடத்திவரும் ‘பீஸ் டி.வி.’ சேனலுக்கு ஏற்கனவே இந்தியா, பங்களாதேஷ் நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இலங்கையும் தடை விதித்து உள்ளது.

இஸ்லாமிய பிரசாரகர்  ஜாகிர் நாயக் தேடப்படும் குற்றவாளியாகவும் இந்தியா அறிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஜாகீர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக இருந்ததாக குற்றம்சாட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Peace tV, Sri Lanka, Zakir Naik
-=-