மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் 27 மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிராவில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணியில் இருந்து வந்தன.   நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தல் முடிவுக்குப் பின்னர் முதல்வர் பதவி பங்கீடு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியில் சிவசேனா கட்சி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.  தற்போது தே. கா மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது.

இன்று மும்பை, தானே,புனே, அவுரங்காபாத் உள்ளிட்ட 27 மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தல் நடைபெற உள்ளன.   மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் இந்நகராட்சிகளில் உறுப்பினர்களால் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்வது வழக்கமாகும்.    தற்போது முந்தைய பாஜக கூட்டணியில் மாறுதல் உண்டாகி இருக்கிறது.

 

இதில் நாகூர் புனே, லாட்டூர் உள்ளிட்ட நகரங்களை தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அத்துடன் ஒரு சில மாநகராட்சிகளில் சிவசேனா மற்றும் பாஜக சமமாக உள்ளதால் அங்கெல்லாம் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் ஆதரவைப் பொறுத்து முடிவு மாறும் நிலையில் உள்ளது.