டில்லி

ந்திரயான் 2 விண்கலத்தை அடுத்து இஸ்ரோ வரும் 2020 ஆம் ஆண்டு சூரியனுக்கு விண்கலம் அனுப்ப உள்ளது.

நேற்று மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.    இஸ்ரோ அனுப்பிய இந்த விண்கலம் தற்போது பூமியின் வட்டப்பாதையில் நிலை கொண்டுள்ளது.   வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இந்த விண்கலம் நிலவில் இறங்கும் என கூறப்பட்டுள்ளது.   இந்த விண்கலத்தின் மூலம் இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய உள்ளது.

அடுத்ததாக ஆதித்யா எல் 1 என்னும் விணகலத்தை சூரியனை ஆய்வு செய்ய அனுப்ப உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.    இந்த விண்கலம் வரும் 2020 ஆம் ஆண்டின் முன் பாதியில் செலுத்தப்பட உள்ளது.   இந்த விண்கலத்தின் மூலம் இஸ்ரோ சூரியனின் ஒளிவட்ட பாதையில் வரும் கதிர் வீச்சு,  சூரியனில் நிலவும் வெப்பம்,  சூரியனின் நிற மண்டலம் உள்ளிட்ட பல இனங்களை ஆராய உள்ளது.

இது குறித்து இஸ்ரோ, “சூரியன் ஒரு நெருப்புக் கோளம் என்பது அனைவரும் அறிந்ததே.  அந்த சூரியனின் வெளிப்புற மண்டலம் அவ்வளவு சூடான வெப்பநிலையிலும் மாறுதல் இன்றி உள்ளது.   இதை ஆதித்யா எல் 1 மூலம் ஆராய உள்ளோம்.   இந்த ஆய்வின் மூலம் சூரியன் குறித்த பல விடை அறியா கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.” என தெரிவித்துள்ளது.