காங்னிசன்ட்-ஐ தொடர்ந்து இன்போசிஸ்: நடுத்தர மற்றும் மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய முடிவு

பெங்களூரு:

பிரபல மென்பொருள் நிறுவனம் காங்னிசன்ட் நிறுவனம் 18ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியான தகவலைத்தொடர்ந்து, தற்போது இன்போசிஸ் மென்பொருள் நிறுவனமும்,  நடுத்தர மற்றும் மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 10 ஆயிரம் ஊழியர்களின்  வேலை நீக்கம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.

ஆசியாவிலேயே 2வது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தற்போது பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்தியாவின் தொழில்நுட்ப ஜாம்பவானாகத் திகழும் இன்போசிஸ் நடுத்த மற்றும் மூத்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்குள்ள வேலை நிலை6 (joblevel -Jl6)  என்ற பிரவில் குறைந்த பட்சம் 2200 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இது அந்தநிலையில் பணியாற்றும் ஊழியர்களில் 10 சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, வேலை நிலை7 மற்றும் வேலைநிலை8 குழுக்களில் 30,092 ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், இவர்களில்  நடுத்தர மற்றும் மூத்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், அசோசியேட் (ஜே.எல் 3 மற்றும் அதற்குக் கீழே) மற்றும் நடுத்தர (ஜே.எல் 4 மற்றும் 5) மட்டங்களில் 2-5% பணியாளர்கள், அதாவது குறைந்த பட்சம் 4ஆயிரம் முதல் அதிக பட்சம் 10ஆயிரம் பேர் வரை பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், இன்போசிஸில் நிறுவனத்தில்  86,558 ஊழியர்கள் மற்றும் 1.1 லட்சம் ஊழியர்கள் அசோசியேட் மற்றும் நடுத்தர வேலை நிலைகளில் பணியாற்றி வருகின்றன. இவர்களில்,  2-5% – உதவி துணைத் தலைவர்கள், மூத்த துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாக துணைத் தலைவர்கள், அதாவது 50 சதவிகிதம் பேர் பணியை விடுவிக்க வலியுறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதன்படி சுமார் 10ஆயிரம் பேர் பணி இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கூறியுள்ள அந்நிறுவனத்தின் உயர்அதிகாரி,  “இன்போசிஸ் நிறுவனம், ஒரு உயர் செயல்திறன் கொண்ட அமைப்பாக, தன்னிச்சையான மனப்பான்மையுடன்  சாதாரண வணிகப் போக்கிற்கு ஒருங்கிணைந்த நிறுவனமாகும். இந்த பணி நீக்கத்தை, எந்தவிதமான வெகுஜன விரோதமாக கருதப்படக்கூடாது.” என்று கூறி உள்ளார்.

மேலும் சமீபத்திய ஆண்டுகளில் எந்தவொரு பணி நீக்கமும் நடைபெறவில்லை என்றும்,  கடந்த காலங்களில் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு சிலரை விடுவித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ள இன்போசிஸ், கடந்த இரண்டு காலாண்டுகளில் பணியின்மை காரணமாக பணி நீக்கம் செய்யும் நிலைமைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்து உள்ளது.