நெல்லை:

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கிறார்.

இந்த கூட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அரசின் உரிமையில் ஆளுநர் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆச்சரியப்படத்தக்க வகையில், மாநில ஆளுங்கட்சியான அதிமுக இதை மறுத்தது. இந்த நிலையில் நெல்லை வரும் ஆளுநர், மக்கல் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6ம் தேதி 25வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பகல் 12.45 மணியளவில் நடைபெறும் விழாவை தலைமை தாங்கி நடத்தி வைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெல்லைக்கு வருகை தர இருக்கிறார்.

பிறகு, திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வரும் ஆளுநர் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்புகளின் பிரநிதிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருக்கிறார்.

ஆகவே ஆளுநரை சந்திக்க விருப்பமுள்ளவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நேரில் சந்திக்கலாம் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் எவரும் இதுவரை மாவட்ட ஆட்சியர் மூலம் செய்திக்குறிப்பு வெளியிட்டு மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்தில்லை. ஆகவே ஆளுநரின் இந்த நடவடிக்கையும் சர்ச்சையை