டெல்லி:
ராகுல்காந்தி, டெல்லி சுக்தேவ் விஹார் மேம்பாலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து தொழிலாளர் குடும்பத்தினர் சொந்த ஊர் செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ வழியின்றி ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.
டெல்லி வழியாக செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களை மாநில அரசு அங்குள்ள சுக்தேவ் விஹார் மேம்பாலத்தில் தடுத்து வைத்துள்ளனர். அவர்களை இன்று சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது மோனு என்ற தொழிலாளி குடும்பத்தினர்,  தாங்கள் அரியானாவிலிருந்து வருகி றோம், ஜான்சிக்குச் செல்ல வேண்டும் என்று கூறினர்.
அதைத்தொடர்ந்து, ராகுலின் அறிவுறுத்தலின் பேரில்  காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், அவர்கள் சொந்த ஊருக்கு   அழைத்துச் செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்தனர்.

ராகுல்காந்தியின்  இநத அதிரடி நடவடிக்கை ஆட்சியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.