டில்லி

ரும் மார்ச் 25 ஆம் தேதி அன்று கொரோனா தொற்றுக்குப் பிறகு பிரதமர் மோடி வங்க தேசம் செல்ல உள்ளார்.

இந்தியா மற்றும் வங்க தேசம் இடையே நட்புறவு உள்ளது.   கிழக்கு பாகிஸ்தான் என்னும் பெயரில் அடிமைப்பட்டு கிடந்த இந்த நாட்டை வங்க தேசம் என புதிய நாடாக பெரிதும் உதவியவர் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆவார்.  அவர் வங்க தேசத்தின் தந்தை என்னும் முஜிபுர் ரகுமானுக்கு இந்த விவகாரத்தில் பேருதவி செய்துள்ளார்.

முஜிபுர் ரகுமான் நூற்றாண்டு விழாவுக்காக இந்திய பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் வங்க தேசம் பயணம் செய்வதாகத் திட்டமிட்டிருந்தார்.  அப்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக இருந்தது.  சர்வதேச பயணங்களுக்குத் தடை விதிக்கப்படிருந்தது.  அவ்வகையில் மோடியின் வங்க தேச பயணம் ரத்து செய்யப்பட்டது.

வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி வங்கதேசம் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவர் தனது  பயணத்தின் போது சிட்டகாங்க், மோங்லா துறைமுகங்கள் வழியாகப் பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஒப்பந்தம் இட உள்ளார்.  அத்துடன் வாகனப் போக்குவரத்து குறித்தும் ஒப்பந்தங்கள் இட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.