பணமதிப்பிழப்புக்குப் பிறகு ஒரே வருடத்தில்  உள்நாட்டு ரொக்கப் பண இருப்பு அதிகரிப்பு

டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு இருந்து மக்களிடம் ரொக்க பண இருப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.   அதன் மூலம் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை ஆகின.   கருப்புப் பணம் முழுவதும் ரொக்கமாகப் பதுக்கப்பட்டதால் அதை ஒழிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்தது.  ஆனால் புழக்கத்தில் இருந்த ரொக்கத்தில் 99% மேல் மாற்றப்பட்டுள்ளன.

மக்களிடம் ரொக்க பணம் இருப்பு பணமதிப்பிழப்பு காலத்தில் மிகவும் குறைவாக இருந்தது.   அத்துடன் சேமிப்புகளில் அதிகப் பணம் இருந்தது.   ஆனால் சேமிப்பு குறையத் தொடங்கி ரொக்க இருப்பு அதிகரித்துள்ளது.  கடந்த 2011-12 ஆம் வருடம் ரொக்க இருப்பு 11.4 லட்சம் கோடியாகவும் சேமிப்பு 57.9 லடம் கோடியாகவும் இருந்தது.  கடந்த 2016-17 ஆம் வருடம் அதாவது பண மதிப்பிழப்பு காலத்தில் ரொக்க இருப்பு மிகவும் குறைந்து சேமிப்பு 67.3 லட்சம் கோடியானது.

ஆனால் 2017-18 ஆம் வருடம் சேமிப்பு 28.6 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.  அதே அளவு ரொக்க இருப்பு அதிகரித்துள்ளது.  அதாவது பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட  கால கட்டத்தில் இருந்ததை விட பன்மடங்கு ரொக்க இருப்பு அதிகரித்துள்ளது.   ஏற்கனவே அரசு கருப்புப் பணம் ரொக்க இருப்பாக உள்ளதாகக் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்ததை விட தற்போது ரொக்க இருப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.