பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு ரொக்க பரிவர்த்தனை அதிகரிப்பு

டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு ரொக்கப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான இல்லங்களில் செலவு மட்டும் இன்றி சேமிப்பும் ரொக்கப் பரிவர்த்தனை மூலமே நடைபெற்று வருகின்றது.   கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த சமயத்தில் இனி அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாகும் என கூறப்பட்டது.   அத்துடன் ஆன்லைன் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்க அரசு பல வகையிலும் பிரசாரம் செய்து வந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு பணப்புழக்கம் ரூ. 19.5 லட்சம் கோடியாக இருந்தது.

தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி  பணப்புழக்கம் ரூ.19.38 கோடியாக குறைந்துள்ளது.    ஆனால் ரொக்கப் பரிவர்த்தனை கடந்த பத்து ஆண்டுகளில் சென்ற ஆண்டு அதிகரித்துள்ளது.  குறிப்பாக இல்ல சேமிப்பு கடந்த வருடத்தில் மட்டும் 2.8% அதிகரித்துள்ளது.   இந்த சேமிப்பு ரொக்க பரிவர்த்தனை மூலமே நடந்துள்ளது.