டில்லி

ரூபாய் நோட்டு மதிப்புக் குறைப்புக்குப் பின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உபயோகிப்பது வெறும் 7% தான் அதிகரித்துள்ளது என பாராளுமன்ற  குழுவின் கூட்டத்தில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற நிதிக் குழுவின் கூட்டத்தில் பல அமச்சக அதிகாரிகள் ரூபாய் நோட்டு மதிப்புக் குறைப்பும் மின்னணு பரிமாற்றமும் என்பது பற்றிய உரையில் தெரிவித்ததாவது :

மொத்த மின்னணு பரிமாற்றம் நவம்பர் 2016ல் 23%ஆக இருந்தது.  மே 2017ல் அது 27.5% ஆக உயர்ந்துள்ளது.

ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற திட்டத்தின் கீழ் பரிமாற்றம் செய்யப்படும் தொகை நவம்பர் 2016ல் ஒரு மில்லியனாக இருந்தது மே 2017ல் முப்பது மில்லியனாக உயர்ந்துள்ளது.

மின்னணு மூலம் வங்கியில் பணம் மாற்றுவது இரு மடங்காக உயர்ந்துள்ளது.

கார்டுகள் மூலம் வர்த்தகம் செய்வதே மிகக் குறைவாக உள்ளது.  அதாவது, முன்பு இருந்ததை விட வெறும் 7% மட்டுமே அதிகரித்து உள்ளது.  நவம்பர் 2016ல் 6.8 மில்லியனாக இருந்தது, மே 2017ல் வெறும் 7.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்