மக்களவை தேர்தலுக்கு பின் 10 பாஜக எம் எல் ஏக்கள் காங்கிரஸில் இணைவர் : காங்கிரஸ் அமைச்ச்சர்

ஹூப்ளி

க்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு 10 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரசில் இணைவார்கள் என காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறி உள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.   இந்த ஆட்சியை கலைக்க பாஜக வெளிப்படையாகவே முயற்சிகள் செய்து வருகிறது.   சமீபத்தில் பாஜக தலைவர் எடியூரப்பா காங்கிரஸை சேர்ந்த 20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுக்கு பின் பாஜகவுக்கு வர உள்ளதாகவும் அவர்களுக்கு சேர வேண்டியதை சேர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கு மாநில அமைச்சர் ஜமீர் அகமது கான் பதிலளித்துள்ளார்.   ஹுபிளியில் அவர் செய்தியாளர்களிடம், “எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்து பாஜக அதை கலைக்க முயற்சி செய்து வருகிறது.  ஒரு பாஜக தலைவர் காங்கிரஸின் 20 சட்டப்பேரவை உறுப்பினர் குறித்து பேசி உள்ளார்.  ஆனால் 10 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். தேர்தல் முடிவுக்குப் பின் அவர்கள் காங்கிரஸில் இணைவார்கள்.

தினேஷ் குண்டு ராவ்

அந்த 10 பேரும் தற்போது அல்ல, சுமார் 2 அல்லது மூன்று மாதங்களாக எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.   பாஜக தங்களுடன் தொடர்பில் உள்ள 20 காங்கிரஸ் உறுப்பினர்கள் பெயரை தெரிவித்தால் நாங்களும் 10 பாஜகவினர் பெயரை அறிவிக்க தயராக உள்ளோம்.   இல்லை எனில் தேர்தல் முடிவுக்கு பிறகு அந்த பாஜகவினர் யார் என்பதை அவர்களே தெரிந்துக் கொள்வார்கள்” என குறினார்.

 

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், “ஆட்சி கவிழ்ந்து விடும் என  பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.  தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அவர்கள் வாய் அடைபடும்.   இதற்கு முன்பும் பாஜகவினர் தீபாவளிக்கு முன் ஆட்சி கவிழும் என்றார்கள்.   அதன் பிறகு சங்கராந்தி (பொங்கல்)க்குள் ஆட்சி கவிழும் என்றார்கள்.  தோல்வியை மறைக்க இவ்வாறு அவர்கள் கூறி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.