காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா…

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி  மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ராகுல், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,   ‘‘லேசான கொரோனா அறிகுறி இருந்ததால், பரிசோதனை செய்து கொண்டேன். அதில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள், தயது செய்து அனைத்து பாதுகாப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றவும். பாதுகாப்பாக இருங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வந்த நேரத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தலையும் அறிவித்து, தேர்தல் ஆணையம் மாபெரும் தவறு செய்தது. இதனால், பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களுக்கும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ராகுல்காந்தியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.