கங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…!

சமீபத்தில் நடிகை கங்கணா ரணவத் சகோதரி ரங்கோலி கங்கணா பருத்தி சேலை ஒன்றை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனுடன், “இன்று ஜெய்ப்பூர் செல்லும் கங்கணா 600 ரூபாய் மதிப்பிலான, கொல்கத்தாவில் வாங்கிய புடவையை அணிந்துள்ளார் . சர்வதேச நிறுவனங்கள் கடத்திப் போகும் முன் நமது இந்திய நெசவாளர்களைஆதரியுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சிலர் அதை புகழ்ந்தாலும் மற்றும் சிலர் அந்தப் புகைப்படத்தில் கங்கணா கையில் வைத்திருந்த கைப்பையை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

‘600 ரூபாய் புடவையுடன் ஏன் 2 லட்ச ரூபாய் பை? அப்பட்டமான பாசாங்கு” என்று சிலர் பதிய இன்னொருவரோ, ”2-3 லட்சம் மதிப்பிலான கைப்பையும், 1-2 லட்சம் மதிப்பிலான காலணி, கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு நீங்கள் செய்யும் இந்த பிரச்சாரம் அற்புதம். போலியாக இருப்பதற்கும் ஒரு எல்லை உண்டு” என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பலரும் பையின் விலை, அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை, ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான செலவு என அடுத்தடுத்து பட்டியலிட்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

கார்ட்டூன் கேலரி