ஜி எஸ் டி : வீடுகளின் விலைகள் குறைக்கப்படவேண்டும் : வெங்கையா நாயுடு

டில்லி

ஜி எஸ் டி அமுலுக்கு வந்தபின் வீடுகளின் விலைகளை பில்டர்ஸ் குறைக்க வேண்டும் எனவும் அதனை அனைத்து மாநிலங்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ஜி எஸ் டி வரும் ஜூலை 1 முதல் அமுலுக்கு வருகிறது.  அதில் கட்டுமானப் பொருட்களின் மீதான வரி குறைந்துள்ளது.  இதனால் வீடுகளின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கையா நாயுடு இது குறித்து  அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

வீடு வாங்குபவர்களிடம் பில்டர்ஸ் அவர்கள் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையை ஜூலை 1க்குள் செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதாக அரசுக்கு பல புகார்கள் வந்துள்ளன.  அதன் மூலம் ஜி எஸ் டி வரிவிதிப்பை தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தப் படுகிறது.  ஆனால் உண்மையில் ஜி எஸ் டி மூலம் வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள், வியாபார கட்டிடங்கள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.  எனவே பில்டர்ஸ் யாரையும் பணம் செலுத்த வற்புறுத்துவது தவறு.  உண்மையில் ஜூலை 1க்குப் பிறகு வாங்கும் அனைத்துக் கட்டிடங்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும்.  வாங்குபவர்களிடம் தவணைத்தொகையும் குறைவாகப் பெற வேண்டும்.  இதனை அனைத்து மாநில முதல்வர்களும் கண்காணிக்க வேண்டும்

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது