கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் அனைத்து மக்களும் பொருளாதார நெருக்கடியில் முடங்கி போயுள்ளனர் . இதனால் ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்து உடனே படங்களை ரிலீஸ் செய்வதெல்லாம் நடக்காத காரியம் என தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை OTT ல் விற்க முடிவு செய்து வருகின்றனர் .
இதை படக்குழுவினர் நேற்று உறுதி செய்திருந்தனர்.இந்த அறிவிப்புக்கு ஐநாக்ஸ் திரையங்க குழுமம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையும் விட்டது .
தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் தனது தயாரிப்பான ஜோதிகா நடித்திருக்கும் பொன்மகள் வந்தாள் டிஜிட்டல் பாதையில் சென்றால் சூரியாவின் படங்களை தடை செய்வதாக அச்சுறுத்தியது.
இந்நிலையில் ஈஸ்டர்ன் இந்தியா மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் (EIMPA) OTT களில் நேரடியாக வெளியாகும் படங்கள் குறித்த அச்சம் குறித்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இதை தொடர்ந்து பி.வி.ஆர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“எங்கள் தயாரிப்பாளர்கள் சிலர் நேராக ஸ்ட்ரீமிங் தளத்திற்கு செல்ல முடிவு செய்ததால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். தியேட்டர்கள்மீண்டும் திறக்கும் வரை தயாரிப்பாளர்கள் தங்களது பட வெளியீட்டைத் தடுத்து நிறுத்துவதற்கான எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கமல் கியான்சந்தனி கூறியுள்ளார் .
ஸ்ட்ரீமிங்கில் திரைப்படங்கள் திரையிடப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. சினிமா கண்காட்சி நடந்த கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரச்னை விநியோக தளங்களில் இருந்து தொடர்ந்து எதிர்கொண்டு தான் வருகிறோம் . இருப்பினும் சினிமா செல்வோரின் ஆதரவையும் உறவையும் நாங்கள் அனுபவித்து தான் வருகிறோம் .
பி.வி.ஆரைப் பொறுத்தவரை, எங்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களின் உழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான திறமைகள் உண்டு. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. நடந்து வரும் COVID-19 நெருக்கடி துரதிர்ஷ்டவசமாக சினிமாக்களை நிறுத்தியது.. இந்த நெருக்கடிமுடிந்தவுடன்பழைய நிலை தொடரும் .
இந்நிலையிலும் ரிலீஸ் தேதிகளில் மாற்றம் செய்து காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் நன்றி சொல்லியே ஆகவேண்டும் என கூறியுள்ளார் .