கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் உடையை அணிந்து வந்த கூலிப்படை நபர்

ஸ்தான்புல்

த்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட அறையில் இருந்து அவருடைய உடைகளை அணிந்து ஒரு நபர் வரும் வீடியோ வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பத்திர்கையாளர் ஜமால் கசோக்கி என்பவர் சவுதி அரேபிய அரசையும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து செய்திக் கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் சவுதி அரசு கடும் அதிருப்தி அடந்தது. ஜமால் துருக்கி நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்பியதால் இஸ்தான் உல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றார்.

அதன் பிறகு அவரைக் காணவில்லை. இது குறித்து கடும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவர் சவுதி அரேபிய தூதரக அலுவலகத்தில் கொல்லப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. முதலில் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்த பின் அவரது த்லையை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்தன. அதன் பிறகு ஜமால் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் நேற்று சவுதி அரேபிய தூதரகத்தில் உள்ள சிசிடிவி பதிவு ஒன்றை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தப் பதிவில் இஸ்தான்புலில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்ட பின் அங்கிருந்து ஒரு நபர் ஜமாலுடைய ஆடையை அனிந்து வருகிறார். அவர் ஜமாலைப் போலவே தோற்றம் உடையவராக இருக்கிறார்.

பின் வாசல் வழியாக வெளியேறிய அந்நபர் ஒரு பொது கழிவறைக்கு சென்று உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பி உள்ளார். அப்போது அவர் முகத்தில் இருந்த பொய் தாடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ஜமாலின் உடைகளை அணிந்து வருபவரின் பெயர் முஸ்தபா அல் மதானி எனவும் அவர் சவுதி அரசின் கூலிப்படையை சேர்ந்தவர் எனவும் துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You may have missed