விண்ணில் பறக்க இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மீண்டும் வாய்ப்பு!

அமெரிக்கா

ல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸூக்குப் பிறகு சாவ்னா பாண்டியா என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு விண்ணில் பறக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லாவுக்கு கடந்த 1997-ம் ஆண்டில் முதல்முறையாக விண்ணில் பறக்க வாய்ப்புக் கிடைத்தது. இதேபோல் 2006 ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் விண்ணில் பறந்தார்.
இதையடுத்து இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பெண்கள் விண்ணில் பறக்கும் வாய்ப்புக்காக citizen science astronaut program என்ற அமைப்பில் பெயர்களை பதிவு செய்தனர்.
பதிவு செய்த 3200 பேரில் சாவ்னா பாண்டியா என்ற இந்திய வம்சாவளி பெண் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு இவர் விண்வெளியில் பயணிக்கிறார். இவருடன் வெளிநாட்டைச் சேர்ந்த மேலும் 8 பேர் பயணிக்கின்றனர்.
32 வயதான சாவ்னா பாண்டியா, கனடாவிலுள்ள அல்பெர்டா நகரில் வாழும் மும்பையை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர்.  தற்போது
அல்பெர்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவர் இசை, எழுத்து, விளையாட்டு உள்ளிட்ட பலதுறைகளில் வித்தகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: After Kalpana Chawla & Sunita Williams, Here’s the 3rd Indian, விண்ணில் பறக்க இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மீண்டும் வாய்ப்பு!
-=-