தெலுங்கானா முதல்வராக நாளை பதவி ஏற்கிறார் சந்திரசேகர ராவ்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில், ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி அபாரமான வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, மாநில முதல்வராக 2வது தடவையாக சந்திரசேகர ராவ்  பதவி ஏற்கிறார்.

சந்திரசேகரராவ் இன்று பதவி ஏற்பார் என்று தகவல்கள் பரவிய நிலையில், பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளை பகல் 1.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சந்திரசேகர ராவ் – தெலுங்கானா

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே சந்திக்கும் எண்ணத்தில், மாநில சட்டமன்றத்தை 8 மாதங்களே முன்பே கலைத்து, தேர்தலை எதிர்கொண்டவர் சந்திரசேகர ராவ். அதைத்தொடர்ந்து கடந்த 7ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று, நேற்ற வாக்குகள் எண்ணப்பட்டன.

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில், 88 இடங்களை கைப்பற்றிய டிஆர்எஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.  தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கான முதல்வர் 51, 514 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில்,  தேர்தல் வெற்றி பெற்ற டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில், சட்டமன்ற கட்சித்தலைவராக சந்திரசேகரராவ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார்.

அதைத்தொடர்ந்து நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  நாளை பகல் 1.30 மணிக்கு அவர் பதவி ஏற்க உள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.