எனக்கு பிறகு மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வர மாட்டார்கள்: திமுக, தேமுதிகவை சாடிய கமல்ஹாசன்

சென்னை:

லக மகளிர் தினத்தையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்,  தனக்கு பிறகு தனது மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என, திமுக, தேமுதிகவை மறைமுகமாக தாக்கி பேசினார்.

தொடர்ந்து பேசியவர், பெண்களுக்கான வேலைவாய்ப்பு என்பது இருந்தும் இல்லாதது போல் இருக்கிறது என்றவர், அரசியல்வாதிகள் அவர்களது தேவைக்காக நாட்டில் வறுமையை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். தனக்கு பிறகு தனது மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று திமுக, தேமுகவை மறைமுகாக சாடினார்.

பின்னர்,  சென்னை அடையாறில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான  தனியார் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமலுடன்  பேசிய கமல், பத்மஸ்ரீ விருது பெற்ற அருணாச்சலம் முருகானந்தமும் பங்கேற்றார். அங்கு  றைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்க கூடிய எந்திரத்தை  தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  இந்தியா முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு, மகிழ்ச்சி என்பது இன்னும் தேவையானதாகவே உள்ளதாக தெரிவித்தவர், தற்போதைய காலத்தில், மாதவிடாய் குறித்து பேசுவதில் கூச்சமோ, தயக்கமோ இல்லை  என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kamalhassan, Makkal Neethi Maiyam
-=-