ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாபா ராம்தேவ்

ண்டன்

ர்ச்சைக்குரிய யோகா ஆசிரியரும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

வேதாந்தா குழுமம் இயக்கி வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநிலம் எங்கும் எதிர்ப்பு கிளம்பியது.    அப்போது நடந்த போராட்டத்தில் நிகழ்ந்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்று 13 பேர் உயரிழந்தனர்.   பலர் காயம் அடைந்தனர்.    அதன் பிறகு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.   ஆயினும் தூத்துக்குடியில் இன்னும் சர்ச்சைகள் ஓயவில்லை.

இந்நிலையில் யோகா ஆசிரியரும் பதஞ்சலி நிறுவன தொழில் அதிபருமான பாபா ராம்தேவ் லண்டனில் வேதாந்தா குழும உரிமையாளர் அனில் அகர்வாலை சந்தித்துள்ளார்.   அந்த சந்திப்பின் போது அனில் அகர்வாலின் மனைவியும் உடன் இருந்துள்ளார்.   சந்திப்புக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு அளித்து பாபா ராம்தேவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “எனது லண்டன் பயணத்தில் வேதாந்தா குழுமத் தலைவர்  அனில் அகர்வாலை சந்தித்தேன்.  அவர் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டின் வளர்சிக்கு உதவி உள்ளார்.   அதற்காக நான் அவரை வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மற்றொரு பதிவில் “சர்வதேச சதிகாரர்கள் சிலர் வேதாந்தா குழுமத்தின் தென் இந்திஅ தொழிற்சாலைக்கு எதிராக செயல்படுகிறார்கள்.   இவர்கள் அப்பாவி மக்களை இதற்கு பயன்படுத்துகிறார்கள்.   ஆலயங்களும் ஆலைகளும் நாட்டை முன்னேற்றும்.  அவைகளை ஒரு போதும் மூடக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுகளுடன் தாம் வேதாந்தா குழும அதிபர் அனில் அகர்வால் மற்றும் அவர் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிந்துள்ளார்.

அனில் அகர்வாலுக்கு ஆதரவு தெர்விக்கும் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை பாதிக்குமா என்பது குறித்து பாபா ராம்தேவ் கருத்து தெரிவிக்கவில்லை.   மேலும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றுச்சூழல் வாரியம் மூட உத்தரவிட்டதைப்  பற்றியோ அல்லது  காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை பற்றியோ பாபா எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.