‘மீ ட்டூ’ சர்ச்சைக்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தன – சின்மயி

சென்னை:

மீபத்தில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி.

 

இந்த சர்ச்சைக்கு பின், தனக்கு பாடல் வாய்ப்பும், டப்பிங் குரல் கொடுக்கும் வாய்ப்பும் பறிபோயிருக்கிறது என்று சமீபத்தில் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மீ ட்டூ சர்ச்சைக்கு முன், நாள் ஒன்றுக்கு மூன்று பாடல்கள் வரை பாடுவேன். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 96 திரைப்படத்தில் பாடல் பாடியதோடு மட்டுமல்லாமல் கதாநாயகி த்ரிஷாவிற்கு டப்பிங் குரலும் கொடுத்தேன். இந்த பட வெற்றிக்கு பிறகு பல வாய்ப்புகள் வரும் என்று எதிர்பாத்திருந்த நிலையில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனிலிருந்து என்னை டெர்மினேட் செய்திருக்கிறார்கள்,” என்றார்.

டப்பிங் யூனியனின் விதிமுறையின்படி ஒருவருக்கு யூனியனுடன் ஏதேனும் பிரச்சனை என்றால் மீடியாவிடமோ, போலீஸிடமோ புகார் கொடுக்க முடியாது.

மேலும், “சினிமா தொழிலாளர்களான நாங்கள் ஃப்ரீலேன்சர்கள் என்ற பட்டியலில்தான் இருக்கிறோம். எங்களுக்கான வேலை இடம் எது என்பதை எப்படி உறுதிசெய்வது? டைரக்டரின் வீடாக இருக்கலாம், அல்லது காபி ஷாப்பாகவும் இருக்கலாம். எது வேண்டுமானாலும் ஷூட்டங் ஸ்பாட்டாக இருக்கலாம். எனவேதான் புதிய சட்டம் வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

இது போன்ற சிக்கல்களை சமாளிக்க ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் தனி தனியாக ஒரு விசாரணை குழு அமைக்கவேண்டும், என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி