பெற்ற மகளை ஆணவக்கொலை செய்துவிட்டு இன்று தவிக்கும் பச்சமால் தேவர்!

நெட்டிசன்:

என்னுடைய சாதி கவுரவத்தை காப்பத்த தான் அன்னைக்கு,எனக்கு பிறந்த எனது இரண்டாவது கர்ப்பிணி மகளை மண்ணெண்ணை ஊத்தி கொளுத்தினேன்.இப்ப அந்த சாதிசனம் கூட என்னை பார்க்க வரல.பரோல்ல ஊருக்கு போனா கூட கொலைகாரன்னுதான் சொந்த சாதிகாரங்களே காது பட பேசுறாங்க.என் ஆசை பெண்ணை கொன்னுட்டு இப்ப அனாதையா இருக்கேன்.-உசிலம்பட்டியில் இரண்டு பெண் குழந்தையோடு வாழ்ந்துவந்த பச்சமால் தேவர்,தனது இரண்டாவது மகள் தாழ்த்தப்பட்ட பையனை மணம் செய்து தலைமறைவாகிவிட்டார்.

அவரை கண்டுபிடிக்கும் போது அந்த மகள் கர்பிணியாக இருந்திருக்கிறார்.வளைகாப்பு செய்ய வேண்டும் எனக்கூட்டி வந்து,வளைகாப்பு முடிந்த உடன்,போயும் போயும் ஒரு பள்ளப்பயலா உனக்கு கிடைச்சாம்மா,நம்ம சாதி கவுரவத்தையே கெடுத்திட்டியே என்று சொல்லிக்கொண்டே மண்ணெண்ணேய் ஊற்றி கொளுத்தி விட்டார்.இன்று மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக நடைபிணமா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

(அந்திமழை இதழில் வன்னியரசு எழுதியது)

Leave a Reply

Your email address will not be published.