பெங்களூரு:

முஸ்லிம், கிறிஸ்தவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக இல்லை என்று கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா  கூறி உள்ளார். இதுசர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான ஆட்சி பதவி வகித்த இந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் இஸ்லாமி யர்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. மத நல்லிணக்கம் கேள்விக் குறியாகி உள்ளது.

கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா

ஆர்எஸ்எஸ்ஸின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மோடி அரசு, இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சித்து வருகிறது.ஒற்றுமையாக வாழும் மக்களை சீர்குலைக்கப் பார்க்கி றார்கள். இந்தியாவை மதவெறி நாடாக்க முயற்சிக்கிறார்கள்.

இந்திய மக்கள் சுதந்திரமாகவும், சமத்துவத்துடனும், சகோதரத்துடனும் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் பெரும்பாலான மக்களும் மோடி அரசுக்கு எதிரான குரல் எழுப்பி வருகின்ற னர்.  பாஜக ஆட்சியில் அரசியல் சட்டமே கேள்விக்குறியாகி விட்டது.

இந்த நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா,  கட்சியின் ‘சப்கா சாத் சப்கா விகாஸ்’  (‘Sabka saath sabka vikaas’ slogan) முழக்கம் குறித்து பேசினார்.

அப்போது, முஸ்லீம்களும்,  கிறிஸ்தவர்களும் நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்பதால் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிட  டிக்கெட் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

ஈஸ்வரப்பாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பல மாநிலங்களில் இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி தற்போது கிறிஸ்தவர்களின் மீது தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.