ஒரு மாதத்திற்கு பிறகு 1200க்கும் கீழாக குறைந்த பாதிப்பு… சென்னையில் மொத்த பாதிப்பு 76,158 ஆக உயர்வு…

சென்னை:

தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு 1200க்கும் கீழாக பாதிப்பு குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

மிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக மேலும் 3,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகைகை  1,34,226 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,185 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  76,158 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. இன்று 1200க்கும் கீழ் பாதிப்பு  தெரிய வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு, 1200 கீழ் பாதிப்பு தெரிய வந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இதுவரை 56,947 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 17,989   பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இன்று ஒரே நாளில் சென்னையில்  26 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1221-ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி