ஜெ. நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு வேட்பு மனு தாக்கல்!! விஷால் அறிவிப்பு

சென்னை:

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நாளை காலை 9 மணிக்கு ராமவரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

பின்னர் 10 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு 12.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.