மோடியை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ்க்கு மாவோயிஸ்ட் மிரட்டல்

மும்பை:

பிரதமர் மோடியை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அவரது குடும்பத்தினருக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல் விடுத்தள்ளனர்.

2 இ- மெயில் மூலம் வந்துள்ள கொலை மிரட்டலை தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதில்,‘‘ சிலரை கொலை செய்வதன் மூலம் எங்கள் சிந்தனையை அழிக்க முடியாது. கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதற்கு கணக்கு தீர்க்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,‘‘2 இ -மெயில்களின் நகல் போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.