பிரனாப் முகர்ஜியை தொடர்ந்து ஆர்எஸ்எஸ் விழாவில் ரத்தன் டாடா

மும்பை:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பங்கேற்க உள்ளார்.

 

 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இதையடுத்து ஆகஸ்ட் 24ம் தேதி மும்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘நானா பால்கர் ஸ்மிரிதி சமிதியின்’ பொன் விழாவில் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பங்கேற்கிறார்.

இது குறித்து சமிதியின் செயலர் கூறுகையில்,‘‘ மும்பை டாடா நினைவு மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள நானா பால்கர் ஸ்மிரிதி சமிதியில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இ ந்த சமிதி தொடங்கியபோது நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க டாடா குழுமம் நிதியுதவி செய்தது.

ஆகஸ்ட் 24ம் தேதி சமிதியின் பொன் விழாவும் நடக்கிறது. இதில் பங்கேற்க ரத்தன் டாடாவை அழைத்தோம். எங்களை அழைப்பை அவர் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. எனவே அவர் பங்கேற்பார் என்ற நம்பிக்கை உள்ளது’’என்றார்.