ராஜஸ்தான் தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சி வரிசையில் பாஜக : ஹர்திக் படேல்

--

கோட்டா, ராஜஸ்தான்

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் பாஜக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் என படேல் இன தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் படேல் இனத் தலைவரான ஹர்திக் படேல் ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் கோட்டா மற்றும் ஜகல்வார் பகுதி மக்களை சந்தித்தார்.

ஹர்திக் படேல், “நான் ராஜஸ்தானில் பல கிராமங்களுக்கு சென்றேன். அங்கு மக்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பட்டில் உள்ளனர். வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அது எதிரொலிக்கும். ஆகவே தேர்தலுக்குப் பின் தற்போதைய ஆளும் கட்சியான பாஜக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும். பாஜகவுக்கு ஏற்ற இடம் அது தான்.

ராஜஸ்தான் மக்கள் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாரான மனநிலையில் உள்ளனர். வேலைவாய்ப்பை உர்வாக்காததால் பாஜகவுக்கு எதிராக இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் பாஜகவுக்கு பாடம் புகட்ட ஆர்வத்துடன் உள்ளனர். நான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதில்லை. எனது அமைப்பான கிசான் கிரந்தி சேனா சார்பில் மக்களை சந்திக்க இங்கு வந்துள்ளேன்: என கூறி உள்ளார்.