ரஜினி முருகன் படம் வெற்றியை தொடர்ந்து தற்போது எம் ஜி ஆர் பாண்டியன் என்ற படம் தயாரிப்பில் உள்ளது.

அமீர்

அமீர் தனது இயக்கத்தில் உருவாகும் சந்தனத் தேவன் என்னும் படத்தை முடித்து விட்டார்.  விரைவில் திரைக்கு வர உள்ளது.

தற்போது ஆதம் பாவா இயக்கத்தில் “எம் ஜி ஆர் பாண்டியன்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதில் எம் ஜி ஆரின் பரம ரசிகனாக நடிக்கிறார் அமீர்.

ரஜினி முருகன் படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ரஜினி ரசிகரான அவர் மாமாவால் ரஜினி முருகன் என பெயரிட்டு அழைக்கப்படுவார்.

ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகன் அமீர் ஒரு எம் ஜி ஆர் ரசிகன் என்பதால் எம் ஜி ஆர் பாண்டியன் என அழைக்கப்படுகிறார்.

அமீருக்கு ஜோடியாக 555 படத்தில் நடித்த மிருத்திகா நடிக்கிறார்.

ஆனந்தராஜ், கஞ்சா கருப்பு, இமான் அண்னாச்சி, பொன்வண்னன் ஆகியோரும் நடிக்கும் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

இது தேனி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசியல் நிகழ்வுகளை உள்ளடக்கிய படம் என்கிறார் இயக்குனர்.