அயோத்தியில் உருவாகும் ‘’ராமர் விமான நிலையம்’’..

த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டதும், அயோத்திக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அங்கு சர்வதேச தரத்திலான விமான நிலையத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இதற்காக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு 525 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த மே மாதம் ஆரம்பித்து விட்டன.

அடுத்த ஆண்டு இந்த விமான நிலையம் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘’ இந்த புதிய விமான நிலையத்துக்கு ராமபிரான் பெயர் சூட்டப்படும்’’ என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

-பா.பாரதி.