புதிய வசதி ‘காப்பி’:   மீண்டும் சர்ச்சையில்  சிக்கிய ஃபேஸ்புக்..


 

சேட்டிங்கின் போது ஆடியோ பதிவிடும் தனது வசதியை ஃபேஸ்புக் காப்பி அடித்துவிட்டதாக சிங்கப்பூரை சேர்ந்த ‘வோக்ஸ்வெப்’ என்ற நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் “ஆடியோ மட்டுமுள்ள பதிவுகள்” என்ற வசதியை சமீபத்தில் வெளியிட்டது. இதன்மூலம் பயனர்கள் தங்களது ஃபேஸ்புக் தளத்தில் ஆடியோ பதிவுகளை குரல் வழித்தகவலாக பகிரலாம் என அந்நிறுவனம் அறிவித்தது.

இந்த தொழில்நுட்பம் தங்களுக்கானது, இதை தாங்கள் தான் முதலில் உருவாக்கினோம் என சிங்கப்பூரின் ’வோக்ஸ்வெப்’  குற்றச்சாட்டை கூறியுள்ளது. தங்களுக்கு உரிமையான வசதியை, ஃபேஸ்புக் அதற்கு சாதகமாக பயபடுத்திக்கொண்டதாக ’வோக்ஸ்வெப்’ தெரிவித்துள்ளது.

2016 ஜனவரி செயலி வடிவில் அறிமுகமான ’வோக்ஸ்வெப்’ நிறுவனத்திற்கு தற்போது 2.5 மில்லியன் பயனர்கள் உள்ளனர். கூகுள் ப்ளேஸ்டோரில் ’வோக்ஸ்வெப்’ 1 லட்சம் முறை பயனர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.