பெங்களூரு:

டந்த 4ந்தேதி ஐதராபாத் அணிக்கும், பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தின் போது, பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி அம்பையர் நைஜல் லியாங்கை முறைத்தார்.

இதன் காரணமாக கடுப்பான அம்பயர், நைஜல் லியாங் (Nigel Llong) இடைவேளை யின்போது பெங்களூரு ஸ்டேடியத்தில் உள்ள அம்பயர்களுக்கான அறையின் கதவை  உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த கதவு உடைந்ததாக தெரிகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 4ந்தேதி பெங்களூரு, ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில், உமேஷ் யாதவ் வீசிய பந்தை,  அம்பயர் நைஜல் லாங் தவறாக நோ-பால் வழங்கியதால், பவுலல் உமேஷ் யாதவ் அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அப்போது மைனத்துக்குள் வந்த கோலி அம்பயரை முறைத்தார்.

இதனால் கடுப்பான அம்பயர் பெலியன் திரும்பியதும் கடுப்பில் அறையின் கதவை காலால்  உதைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பந்துவீசியது பெங்களூர் அணி. அந்த அணியின் கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்து அசத்தினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை அம்பயர் நைஜல் லியாங் , நோ பால் என அறிவித்தார். ஆனால், ரீபிளேவில் அது நோ பால் இல்லை என தெரிந்தது.

இதையடுத்து, உமேஷ் யாதவ் அம்பயரிடம் விளக்கம் கேட்டார்.  அம்பயர் அவரை தொடர்ந்து பந்துவீசுமாறு கூறினாரே ஒழிய, நோ பாலை திரும்பப் பெறவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் கோலி செம கடுப்பாகி அம்பயர் அருகே வந்தார். ஆனால், எதுவும் பேசவில்லை.  அம்பயர் அருகே வரை சென்றுவிட்டு, அவரை முறைத்தவாறு போட்டி முடிந்து சென்றுவிட்டார்.

ஆனால், விராட் கோலி தன்னிடம் வாக்குவாதம் செய்யவந்ததை நினைத்துக்கொண்டே ஓய்வறைக்கு சென்ற அம்பயர் அங்கிருந்த கண்ணாடி கதவை தனது காலால் எட்டி உதைத்தார். இதனால் அந்த கதவு உடைந்தது.