சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்களை அதிமுக ஒதுக்கி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக மூத்த தலைவரும், வழக்கறி ஞருமான பாலு, நாடாளுமன்ற தேர்தலில் பாமக ஜெயித்த உடன், ராஜிவ் கொலை குற்றவாளிகளான 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்து வரும், பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக அ பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் மக்கள் சந்திப்பு நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 24ந்தேதி தொடங்கிய அவரது மக்கள் சந்திப்பு தொடர்ந்து வருகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பாமக,  அவர்களின் விடுதலையை மறுத்து வரும் மத்திய அரசான பாஜக  அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இது சமூக வலைதளங் களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாமகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பாலுவிடம் செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பாலு,  பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும், 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

பாலுவின் பதிலைப்பார்த்தால்…. பேரறிவாளன் உள்பட 7 பேரும் விடுதலை ஆக மாட்டார்கள் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் பாஜகவும் வெற்றிபெறப் போவதில்லை… பாமகவும் வெற்றிப்போறவதில்லை என்ற நிலையில், பாலுவின் பதில் கேலிக்குறியதாகி உள்ளது.