அரசு நிலம் அபகரிப்பு: கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ராஜினாமா?

விழா ஒன்றில் முதல்வர் பிரனாயி விஜயனுடன் தாமஸ் சாண்டி

திருவனந்தபுரம்.

ரசுக்கு சொந்தமான  நிலத்தை அமைச்சர் ஆக்கிரமித்துள்தாக எழுந்த புகாரை தொடர்ந்து, கேரளா ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதன் காரணமாக கேரள மாநில போக்குவரத்துறை அமச்சர் தாமஸ்சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கேரளாவில் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் கூட்டணி கட்சியான   தேசியவாத காங்கிரசும் இடம்பெற்றுள்ளது.

அந்த  கட்சியின் எம்.எல்.ஏ. தாமஸ்சாண்டி.போக்குவரத்து துறை  அமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில், கேரளாவில்  குட்டநாடு தொகுதியைச் சேர்ந்த இவருக்கு சொந்தமாக ரிசார்ட் உள்ளது. இதற்கு செல்ல அரசு நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அந்த இடத்தை ஆய்வுசெய்த ஆலப்புழா கலெக்டர் அனுபமா,  அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக அரசுக்கு அறிக்கை அளித்தார்.

ஆனால், கலெக்டரின் அறிக்கைக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்து, கலெக்டரின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அமைச்ச்ர  தாமஸ் சாண்டிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மந்திரியாக இருக்கும் ஒருவர், அரசு அதிகாரியை எதிர்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாமா? அப்படி யானால் அரசு மீது மந்திரிக்கு நம்பிக்கை இல்லையா? அவர், பதவியை ராஜினாமா செய்வதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தது.

ஐகோர்ட்டு கண்டனத்தை தொடர்ந்து மந்திரி தாமஸ்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

முதல்-மந்திரி பினராயி விஜயனும் இது தொடர்பாக கூட்டணி கட்சிதலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், தாமஸ்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தினர்.

தாமஸ்சாண்டியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளில் சிலரும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதனால் தாமஸ்சாண்டிக்கு நெருக்கடி முற்றியது. இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் மந்திரிசபை கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இக்கூட்டம் தொடங்கும் முன்பு முதல்-மந்திரி பினராயி விஜயனை, மந்திரி தாமஸ்சாண்டி சந்திக்க உள்ளார்.

அப்போது அவர், ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரியிடம் கொடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.