சென்னை:

மிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலைலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில்  தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக  மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தறபோது பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி,  பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து அங்குள்ள, திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ஸ்டாலின் கடுமையாக குறைகூறிய பழனிசாமி,  ஸ்டாலின் தொடர்ந்து வரம்புமீறி பேசி வருவதாகவும், பிரதமரையும், தம்மையும் கண்ணியக்குறைவாக பேசி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், பொறுமைக்கும் ஓர் அளவு இருப்பதாக எச்சரித்துள்ளார்.

ஸ்டாலின் இதுபோல தொடர்ந்து பேசினால், எங்களிடம் இருந்தும் இதுபோன்ற  பேச்சுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.

அதைத்தொடர்ந்து,  தொண்டாமுத்தூரில் பரப்புரை மேற்கொண்டபோது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருக்க திமுகதான் காரணம் என குற்றஞ்சாட்டிவர், நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முடிந்ததும், .உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும்  என்றும், மக்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.